அமலாக்கத்துறை முடக்கிய நிலம் ரூ.5.61 லட்சம் கோடிக்கு திருத்தணியில் பத்திரப்பதிவு மாஜி சார்பதிவாளர், டி.டி.நாயுடு உட்பட 3 பேர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் குன்னவலம் கிராமத்தில் தீனதயாள் (டி.டி.) மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை கடந்த 2013ல் வழக்கு பதிவு செய்தது. அதைதொடர்ந்து டி.டி.மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான 5.61 கோடி மதிப்புள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.ஆனால், அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை மறைத்து, முறைகேடான வகையில் டி.டி.மருத்துவக்கல்லூரி அறக்கட்டளை செட்டில்மென்ட் மூலம் மற்றொரு டி.டி. அறக்கட்டளைக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. இவை அனைத்தும் டாடாஜி என்பவருக்கு டி.டி.நாயுடு செட்டில்மென்ட் செய்துள்ளார்.முறைகேடாக செட்டில்மென்ட் செய்யப்பட்ட சொத்துகள் டி.டி. கல்வி, சுகாதார அறக்கட்டளையில் இருந்து டி.டி. மருத்துவம், கல்வி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் படி ஒரு ஏக்கர் ரூ.11,192 கோடி, அதாவது ஒரு சதுர அடி ரூ.25 லட்சத்து 67 ஆயிரம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருத்தணி சார்பதிவாளர் செல்வக்குமரன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் அமலாக்கத்துறையால் கடந்த 2015ம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டதை கருத்தில் கொள்ளாமல் டி.டி.நாயுடு, மற்றும் டாடாஜி ஆகியோருக்கு ஆதராகவும், அரசு விதிகளுக்கு புறம்பாகவும் பத்திரப்பதிவு செய்து மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து பத்திரப்பதிவு துறை மோசடிக்கு உடந்தையாக இருந்த திருத்தணி சார்பதிவாளர் செல்வக்குமரனை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.இதற்கிடையே இந்த மோசடி குறித்து சங்கர் என்பவர் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. அதில், அமலாக்கத்துறை முடக்கிய சொத்துக்களை மறைத்தும், நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை விட கூடுதலாக தன்னிச்சையாக மதிப்பீடு செய்து மோசடியில் ஈடுபட்டதும் உறுதியானது.  அதைதொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருத்தணி முன்னாள் சார்பதிவாளர் செல்வக்குமரன் மற்றும் டி.டி.நாயுடு சுகாதார அறக்கட்டளை உரிமையாளர் டி.டி.நாயுடு, டி.டி.நாயுடு மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகி டாடாஜி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது….

The post அமலாக்கத்துறை முடக்கிய நிலம் ரூ.5.61 லட்சம் கோடிக்கு திருத்தணியில் பத்திரப்பதிவு மாஜி சார்பதிவாளர், டி.டி.நாயுடு உட்பட 3 பேர் மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: