திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்: அரோகரா முழக்கங்களுடன் திரளான பக்தர்கள் வழிபாடு..!!

நெல்லை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முருக கடவுளின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசித் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மாசித் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மாசித் திருவிழாவில் பக்தர்கள் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதால் ஏராளமானோர் கொடியேற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு வழிபட்டனர். அரோகரா முழக்கங்களுடன் திரளான பக்தர்கள் வழிபட்டது பரவசத்தில் ஆழ்த்தியது. முன்னதாக அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தீபாராதனையும், பின்னர் உதயமார்த்தாண்ட அபிஷேகம் என 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. 12 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மாசித் திருவிழா தேரோட்டம் வருகின்ற 16ம் தேதி நடைபெறவுள்ளது. …

The post திருச்செந்தூர் முருகன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்: அரோகரா முழக்கங்களுடன் திரளான பக்தர்கள் வழிபாடு..!! appeared first on Dinakaran.

Related Stories: