ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார்

டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார். சிபு சோரன் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது ஷிபு சோரனின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது, தொடர்ந்து அவருக்கு வென்டிவேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று டெல்லியில் சிபு சோரன் காலமானார்

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக 38 ஆண்டுகள் பதவி வகித்தார். இவர் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 2005-ம் ஆண்டில் 10 நாட்கள் மட்டுமே அவர் பதவி வகித்துள்ளார். இதன் பின்பு கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை, பின்பு, 2009-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது, அவரது மகனும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகவும் சிபு சோரன் பதவி வகித்தார்.

The post ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன்(81) உடல்நலக் குறைவால் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: