இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் எனது பெயரே இல்லையென்றால் நான் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்?” என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய தேஜஸ்வி யாதவ், “ஒவ்வொரு பேரவை தொகுதியிலும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களும், மொத்தமாக 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆனால், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், முகவரி, பூத் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் வௌியிடவில்லை. என் பெயரும் இல்லை” என குற்றம்சாட்டி உள்ளார்.
தேர்தல் ஆணையம் மறுப்பு
தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. “தேஜஸ்வி யாதவ் தனது பழைய வாக்காளர் எண்ணை வைத்து தேடியிருப்பார். அதனால் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை. புதிதாக தரப்பட்ட வாக்காளர் எண், வரிசை எண்ணில் தேஜஸ்வி யாதவின் பெயர் இடம்பெற்றுள்ளது” என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
The post சிறப்பு தீவிர திருத்தம் முடிந்த பிறகு வௌியிடப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
