போர்ட் பிளேர்: அந்தமான் மற்றும் நிகோபர் கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் முறையாக நேற்று அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்தமானில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இதில் பல ஆவணங்கள் சிக்கியது.
The post அந்தமான் தீவில் முதல்முறையாக அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.