இந்த நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ” நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழிகளில் செல்போன் செயலிகள் மூலம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவு செய்யப்படும்.
செயலியில் பதிவு செய்யப்படும் விவரங்கள் உடனுக்குடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணைய சர்வருக்கு அனுப்பபடும். பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவு செய்யவும் வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் பகுதியாக வீடுகள் கணக்கெடுக்கும் பணிகள் 2026 ஏப்ரல் மாதம் தொடங்கும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாட்டிலேயே முதல்முறையாக டிஜிட்டல் முறையில் செல்போன் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு!! appeared first on Dinakaran.
