சென்னை: சென்னையில் புதிதாக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் இதர பேருந்துகளை போல் சிங்கார சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் விளக்கமளித்துள்ளது.