சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒஸாமா ரபி கூறுகையில்,‘‘சூயஸ் கால்வாயின் தெற்கு நுழைவாயிலில் இருந்து 130 கடல்மைல் தொலைவில் விபத்து நிகழ்ந்தது. எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கியதால் சூயஸ் கால்வாயில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. கப்பல் மூழ்கியது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார். இதுகுறித்து செங்கடல் மாகாண ஆளுநர் அமீர் ஹனாபி,‘‘ இந்த விபத்தில் மாயமான 3 ஊழியர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் எகிப்து கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
The post செங்கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி 4 பேர் பலி: 23 பேர் காயங்களுடன் மீட்பு appeared first on Dinakaran.
