மாமியார் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி அழுதுள்ளார். இந்நிலையில், லோகேஸ்வரி நேற்று முன்தினம் இரவு வீட்டின் கழிவறையில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைத்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து லோகேஸ்வரியின் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் லோகேஸ்வரியின் கணவர் பன்னீர் மற்றும் மாமியார் பூங்கோதை ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் மாமனார் மற்றும் நாத்தனாரை தேடி வருகின்றனர். ஏற்கனவே திருப்பூரைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது பொன்னேரியிலும் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
The post கூடுதலாக ஒரு சவரன் வரதட்சணை கேட்டு கொடுமை திருமணமான 4 நாட்களில் இளம்பெண் தற்கொலை:கணவர், மாமியார் கைது appeared first on Dinakaran.
