இதற்குப் பிறகு அந்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, சட்டமாக்கலை தாமதப்படுத்தவோ மட்டும்தான் முடியும். பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றிய மசோதாவை மேலவையால் நிராகரிக்க முடியாது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post குணப்படுத்த முடியாத நோய் பாதிப்பு: கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்! appeared first on Dinakaran.
