மழைக்கால கூட்டத்தொடரில் சீனா குறித்து விவாதம்: காங். நம்பிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தள பதிவில்,“கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வானில் நமது தேசத்திற்காக 20 வீரர்கள் உயிர்தியாகம் செய்த நான்கு நாட்களுக்கு பின், பிரதமர் மோடி இந்திய எல்லையில் யாரும் அத்துமீறி நுழையவும் இல்லை. இந்திய பகுதியை யாரும் கைப்பற்றவும் இல்லை என்று கூறியதன் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த வருத்தமளிக்கும் நிகழ்வு, கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி திரும்பபெறும் ஒப்பந்தத்துடன் முடிந்தது.

இதன் கீழ் இந்திய ரோந்து படைகள் டெப்சாங், டெம்சோக் மற்றும் சுமோரில் உள்ள ரோந்து புள்ளிகளை அடைவதற்கு சீனாவின் ஒப்புதலை கோருகின்றன. 2020ம் ஆண்டுக்கு முன்பு நமது வீரர்கள் தடையற்ற அணுகலை பெற்ற இடங்கள் நிரந்தரமாக தடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய பிராந்திய பின்னடவை குறிக்கிறது. 5 ஆண்டுகளாக சீனா குறித்த விவாதத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகின்றது. வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரதமர் மோடி இறுதியாக இத்தகைய விவாதத்துக்கு ஒப்புக்கொள்வார் என்று காங்கிரஸ் நம்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post மழைக்கால கூட்டத்தொடரில் சீனா குறித்து விவாதம்: காங். நம்பிக்கை appeared first on Dinakaran.

Related Stories: