17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து பெற்ற தெலங்கானா தம்பதி!!

டெல்லி : தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த ஆண்டு முதலே கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ தொடங்கினர். 2008-ம் ஆண்டு மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் ஸ்ரீகாந்த் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் மகளின் நலனுக்காக கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறி, மனைவி விஜயலக்ஷ்மி மனு தாக்கல் செய்தார்.

எனினும் இருவரது மனுக்களை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், தம்பதிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, விஜயலட்சுமி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தம்பதிக்கு இடையே ஆழமாக வேரூன்றிய அவ நம்பிக்கை, இருவரும் சேருவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் சாத்தியமற்ற தாக்கிவிட்டதாக தெரிவித்தது. எனவே சட்டத்தின் மூலம் இருவரையும் சேர்த்து வைப்பது எந்த பலனையும் தராது என கூறி விவாகரத்தை உறுதி செய்தது. மேலும் மனைவிக்கு ஒரே தவணை ஜீவனாம்சமாக ரூ.50 லட்சம் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: