நீங்கள் மிகச் சிறந்தவர், நான் உங்களைப் போலவே இருக்கவும் செயல்படவும் விரும்புகிறேன்: பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி புகழாரம்

அல்பாட்டா: பிரதமர் மோடி நீங்கள் மிகச்சிறந்தவர் என்று ஜி7 உச்சி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம் தெரிவித்துள்ளார். கனடா நாட்டில் 2 நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்த ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் பல நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டார் . அப்போது பிரதமர் மோடியை, மெலோனி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளிடையே உள்ள நல்லுறவு, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இணைந்து செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.

இதைத் தொடர்ந்து ஜார்ஜியா மெலோனி எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து வீடியோவை வெளியிட்டார். அதில் பிரதமர் மோடி… நீங்கள் மிகச் சிறந்தவர். நான் உங்களைப் போலவே இருக்கவும் செயல்படவும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். மேலும் இருவரும் சந்தித்து கைகுலுக்கும் வீடியோவையும் மெலோனி பகிர்ந்தார். கடந்த முறை துபாயில் நடைபெற்ற சிஓபி 28 மாநாடு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது இருவரும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. மெலோனியின் வலைதளப் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் நன்றி தெரிவித்துள்ளார்.

The post நீங்கள் மிகச் சிறந்தவர், நான் உங்களைப் போலவே இருக்கவும் செயல்படவும் விரும்புகிறேன்: பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: