புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிதாக 642 நகர்ப்புற மற்றும் கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் கிராமப்புறங்களில் 617 துணை சுகாதார நிலையங்களும், நகர்ப்புறங்களில் 25 துணை சுகாதார நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துணை சுகாதார நிலையங்களில் பணிபுரிய புதிய பதவி எதுவும் உருவாக்கப்படவில்லை.

அதற்கு பதிலாக குறைவாக பணிகள் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும் செவிலியர்கள் தேவைக்கேற்ப இந்த துணை சுகாதார நிலையத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மின்விசிறிகள், மேசைகள் மற்றும் நாற்காலிகள் போன்ற தற்போதைய உள்கட்டமைப்புகள் பயன்படுத்தப்படும். மேலும் புதிய துணை மையங்களுக்கு வாடகை இல்லாத அல்லது அரசு கட்டிடங்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

 

The post புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: