மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவெறி அரசியலைக் கண்டித்து மதுரையில் விசிக தலைவர் திருமாவளவன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விசிக தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
