நாமக்கல் : நாமக்கல்லில் கோழிப் பண்ணைகளில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.6.40ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் நுகர்வு, விற்பனை அதிகரித்து வருவதால் விலை உயர்ந்து வருவதாக கோழிப் பண்ணையாளர்கள் தகவல் அளித்துள்ளனர். 55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
