ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 10 பேர் கைது

ஒடிசா: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிறு அன்று இரவு 9.30 மணியளவில் கோபால்பூர் கடற்கரையில் ஆண் நண்பருடன் இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது அருந்தியிருந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியின் நண்பரிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசியுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அந்த ஆண் நண்பரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு, அந்த மாணவியை 10 பேரும் கொண்ட கும்பல் பாழடைந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண், ஆண் நண்பர் அளித்த புகாரின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கோபால்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு ஒடிசா மாநில துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 10 பேரில், மூன்று பேர் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 10 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: