”ஜூனியர் சூப்பர் கிங்ஸ்” கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

பெரம்பலூர், மே 21: பெரம்பலூரில் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில்நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மாவட்ட முதல்தர பிரிவு போட்டியில்-ரோவர்ஸ் அணி முதல் இடத்தையும், மாவட்ட கிரிக்கெட் அணி இரண்டாம் இடத்தையும் வென்றது. இரண்டாம் தர பிரிவு போட்டியில் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி முதல் இடத்தையும், புனித தாமஸ் கிரிக்கெட் கிளப் அணி இரண்டாம் இடத்தையும் வென்றது. மூன்றாம் தர பிரிவு போட்டியில் பிரைடு ஆப் பெரம்பலூர் அணி முதலிடத்தையும், சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி இரண்டாம் இடத்தையும் வென்றது.

பள்ளிகளுக்கு இடையேயான \”ஜூனியர் சூப்பர் கிங்ஸ்\” கோப்பைக்கான போட்டியில் பெரம்பலூர்  ராம கிருஷ்ணா ஆண்கள் மெட்ரிக் பள்ளி அணி முதல் இடத்தையும், கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பெரம்பலூர் கிரிக்கெட் சங்க செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா, ஆலோசனைக் குழு தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கும், சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பவுலர்கள் மற்றும் மேன் ஆஃப் த சீரியஸ், மேன் ஆஃப் த மேட்ச் ஆகியோருக்கு பரிசுக் கோப்பைகள் மற்றும் விருதுகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கி பாராட்டினர்.

The post ”ஜூனியர் சூப்பர் கிங்ஸ்” கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு appeared first on Dinakaran.

Related Stories: