உதகையில் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள முதல்வர், பொதுமக்களுக்கு பட்டாக்களை வழங்குகிறார். தொட்டபெட்டாவில் பழங்குடியின மக்களை சந்தித்தும் கலந்துரையாட உள்ளார். 15ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் நாளை உதகை செல்கிறார்.