ஐசிசியின் தலைமை நிர்வாகிகள் கமிட்டி கூட்டம், கடந்த மாதம் ஜிம்பாப்வேயில் நடந்தது. அப்போது, 2027ல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் முறைப்படி விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே, இந்தியாவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு, அந்த போட்டியில் இந்திய அணி இடம்பெறாமல் போகும் சூழல் ஏற்பட்டால் டிக்கெட் விற்பனை எப்படி இருக்கும் என்ற சந்தேகத்தை கிரிக்கெட் நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ளனர். மேலும், இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றால், அந்த போட்டியை இந்தியாவில் எப்படி நடத்துவது என்பது குறித்தும் சில நிர்வாகிகள் ஐயம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 2027ல் இறுதிப் போட்டி இந்தியாவில் நடக்குமா? உரிமையை பெற பிசிசிஐ தீவிரம் appeared first on Dinakaran.
