கிருஷ்ணகிரி, மே 10: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய இந்து மதத்தினை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தினேஷ்
குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் 27 காலிப்பணியிடங்கள் நிரப்பும் பொருட்டு, கோயில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமும், தகுதியும் உள்ள இந்து மதத்தினை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04343-236134 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post மாஜி படைவீரர்கள் விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.
