ஷோரூமில் தீ விபத்து: 10 பைக்குகள் கருகின

 

ஆவடி: ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஊழியர்கள் வழக்கம்போல் ஷோரூமை மூடிவிட்டுச் சென்றனர். இதனிடையே, நேற்று அதிகாலை ஷோரூமின் 3வது தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையம் மற்றும் ஆவடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், மாவட்ட அலுவலர் லோகநாதன், ஆவடி நிலைய அலுவலர் நாகராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆவடி, அம்பத்தூரில் இருந்து கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 3வது மாடியில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் சோலார் பேனல்கள் மற்றும் 10 பைக்குகள் தீயில் கருகி நாசமாகின.

The post ஷோரூமில் தீ விபத்து: 10 பைக்குகள் கருகின appeared first on Dinakaran.

Related Stories: