தண்டவாளத்தை கடந்தபோது விரைவு ரயில் மோதி முதியவர் பரிதாப பலி

 

திருவள்ளூர், ஜன.6: திருவள்ளூர் ரயில் நிலையத்தில், திருப்பதிக்கு செல்லும் ரயிலில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடந்தபோது, வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் மோதி முதியவர் பரிதாபமாக பலியானார்.
சென்னை அடுத்து திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் காந்திராஜன் (52). அடிக்கடி திருப்பதி சென்று வருவது வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் மதியம் திருவேற்காட்டில் இருந்து ஆவடி சென்று, அங்கிருந்து புறநகர் மின்சார ரயிலில் திருவள்ளூர் சென்றுள்
ளார்.
பின்னர், மதியம் 3 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புட்லூர் செல்லும் மார்க்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது, மங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்ததும் விரைந்து வந்த திருவள்ளூர் ரயில்வே இருப்புப்பாதை போலீசார், காந்திராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: