திருத்தணி, ஜன.5: பள்ளிப்பட்டு அடுத்த, காக்களூர் காலனியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெங்கல்ராஜிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், டிராக்டர் ஓட்டிச்சென்றபோது மோதியதில் சமுதாய சுகாதார வளாகத்தின் கைப்பிடி சுவர் சேதமடைந்தது. இதுகுறித்து, ஊராட்சி செயலாளர் முரளி, பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
