ஆவடி மாநகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை

ஆவடி, ஜன.10: ஆவடி மாநகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகையை கொண்ட பொதுமக்களுக்கு, ஆவடி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆணையர் சரண்யா தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் உத்தரவின் படியும், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா உத்தரவின் படியும் பொதுமக்களுக்கு, ‘புகையில்லா போகி’ கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆவடி மாநகராட்சியால் ஆங்காங்கே விழிப்புணர்வு பேனர்கள், ஒலிபெருக்கி மூலம் பொது அறிவிப்பு செய்தல் மற்றும் கீழ்கண்ட இடங்களில் பொது மக்களிடமிருந்து பழைய துணிகள், மரச்சாமான்கள், மறுசுழற்சி பொருட்கள், பிளாஸ்டிக், டயர்கள், ஆகியவை போகி அன்று கொளுத்தாமல் அதை பெறும் வகையில் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது.

முதலாவது மண்டலம் தண்டுரையில் வள்ளலார் நகர், பட்டாபிராமில் பாபு நகர் எரிவாயு தகனமேடை அருகில், மிட்டணமல்லி வரி வசூல் மையம் அருகில், கோவில்பதாகை மாநகராட்சி பள்ளி, இரண்வாது மண்டலம் திருமுல்லை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அண்ணா பூங்கா, எட்டியம்மன் கோயில், ஐயா கோயில், சரஸ்வதி நகர் நுண்ணுயிர் பசுமை உரக்குடில், மூன்றாவது மண்டலத்தில் ஆவடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில், சுமங்கலி கார்டன், பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிரில், சி.சி.வி.பள்ளி அருகிலுள்ள பூங்கா, 4வது மண்டலத்தில் காமராஜ் நகர் விவேகானந்தா தெரு, கருமாரியம்மன் கோயில் அருகில், கோபாலபுரம் மெயின் ரோடு பிள்ளையார் கோயில் அருகில், அண்ணாநகர் மாநகராட்சி பள்ளி அருகில் பொது மக்கள் மேற்காணும் இடங்களில் 12.1.2026 மற்றும் 13.1.2026 ஆகிய தேதிகளில் பழைய பொருட்கள் வழங்கி காற்றுமாசு ஏற்படாத வகையில், ‘புகையில்லா போகி’ கொண்டாட ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related Stories: