ஓடிஐ, டி20 போட்டிகளில் இந்தியா நம்பர் 1: ஐசிசி தரவரிசை வெளியீடு

லண்டன்: ஆடவர் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. அதன்படி, ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகளில், இந்தியா 36 போட்டிகளில் ஆடி 4471 புள்ளிகள் பெற்று, 124 ரேட்டிங்குடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த பட்டியலில், நியூசிலாந்து 4160 புள்ளி, 109 ரேட்டிங்குடன் 2ம் இடம், ஆஸ்திரேலியா, 3473 புள்ளி, 109 ரேட்டிங்குடன் 3ம் இடத்தில் உள்ளது. இவற்றுக்கு அடுத்த இடங்களில் இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் உள்ளன.

அதேபோல், டி20 போட்டிகளில் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா 57 போட்டிகளில் ஆடி, 15425 புள்ளிகளுடன் 271 ரேட்டிங் பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா அணி, 29 போட்டிகளில் ஆடி, 7593 புள்ளிகள், 262 ரேட்டிங்குடன் 2ம் இடத்தில் தொடர்கிறது. இந்த பட்டியலில், அடுத்தடுத்த இடங்களில், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் உள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா, 25 போட்டிகளில் ஆடி 3139 புள்ளிகளுடன், 126 ரேட்டிங் பெற்று, முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்து அணி, 113 ரேட்டிங் பெற்று, 2 இடம் உயர்ந்து, 2ம் இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்ரிக்கா, 111 ரேட்டிங்குடன் ஒரு இடம் சரிந்து 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா, 105 ரேட்டிங்குடன் ஒரு இடம் சரிந்து 4ம் இடத்துக்கு சென்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

 

The post ஓடிஐ, டி20 போட்டிகளில் இந்தியா நம்பர் 1: ஐசிசி தரவரிசை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: