கடன் வசூல் என்ற பெயரில் அத்துமீறி நடந்துகொள்ளும் நிறுவனங்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என வற்புறுத்தி வந்தோம். கட்டாய கடன் வசூல் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டப் பேரவையில் புதிய மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இந்த சட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இதில் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தை தவிர்க்க உரிய பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு ெதரிவித்தார்.
The post கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறை தண்டனை; தமிழக அரசின் மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு appeared first on Dinakaran.
