சென்னை: மத உணர்வுகளைத் தூண்டி குளிர்காய யார், எவ்வளவு முயன்றாலும் மீண்டும் திராவிட மாடல் அரசுதான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் யதார்த்தம் புரியாமல், வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தையும் உணராமல் பொய்களை வைக்கின்றனர். பக்தர்கள் போற்றும் ஆட்சி இது என மக்கள் தீர்ப்பில் தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
