தலைஞாயிறு ஒன்றிய திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர்கள் நியமனம்

வேதாரண்யம்,ஏப்.26: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றிய திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர்கள் புதியதாக நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமனம் செய்யப்பட்ட தலைஞாயிறு ஒன்றிய திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெய்சங்கர், துணை அமைப்பாளர்களாக புஷ்பராஜ், முத்துக்கிருஷ்ணன், அழகுராஜா, விஜயராகவன், ஞானசேகரன் ஆகியோர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர், மாவட்ட கழக செயலாளர் கவுதமன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் மகாகுமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். புதிய பொறுப்பாளர்களுக்கு நாகை மாவட்ட திமுக செயலாளர் கவுதமன் வாழ்த்து தெரிவித்தார்.

The post தலைஞாயிறு ஒன்றிய திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: