ஐபோன் தயாரிப்பு – இந்தியாவுக்கு மாற்றப்படுவது ஏன்?
சீனா அமெரிக்கா வர்த்தகப் போரால் ஐபோன்கள் தயாரிக்கும் பணியை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது 145% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். பின்னர் அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் ஐபோன்களுக்கு டிரம்ப் வரியில் இருந்து விலக்களித்தார். எனினும் சீனா ஏற்றுமதி செய்யும் மின்னணு சாதனங்கள் மீது விதிக்கப்படும் 20% வரி தொடரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வரியால் சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் ஐபோன்கள் விலை அதிகரிக்கப்படும். ஐபோன் விலை அதிகரிப்பதை தவிர்க்க அவற்றை இந்திய நிறுவனங்கள் மூலம் தயாரித்து பெற ஆப்பிள் முடிவு செய்துள்ளது.
The post அமெரிக்காவில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் திட்டம்..!! appeared first on Dinakaran.
