இப்பிரிவினரின் ஒருங்கிணைந்த முயற்சியால், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றம் புரிந்த / குற்றம் புரிய வாய்ப்புள்ள, புறநகரில் வசிக்கும் நபர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மேற்படி குற்றம் சம்பந்தப்பட்ட 786 தகவல்கள் இதுவரையில் சேகரிக்கப்பட்டு, உள்ளூர் காவல் துறையினருக்கு அனுப்பப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவினரால், கொடுங்குற்றத்தில் ஈடுபடவாய்ப்புள்ள 4,300 போக்கிரிகளும், 476 பெரிய குழுக்களும், 223 சிறிய குழுக்களும் கண்காணிக்கப் படுவதுடன், அவர்கள் சார்ந்த வழக்குகள் முறையாகக் கண்காணிக்கப்பட்டு, மூன்று 3 A வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும், 8 B வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும், 27 C வகை சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கும், 01 KD வகை குற்றவாளிக்கும் என மொத்தம் 39 குற்றவாளிகளுக்கும் அவர்கள் சார்ந்த குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றும் தரப்பட்டுள்ளது.
மேலும், இப்பிரிவு உருவாக்கப்பட்டதன் விளைவாக, பெரும்பான்மையான குழுக்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, 32 A+ வகை குற்றவாளிகளும், 108 A வகை குற்றவாளிகளும், 325 B வகை குற்றவாளிகளும், 549 C வகை குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதோடு, 417 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், கொடுங்குற்றத்தில் ஈடுபட்டு பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளாக இருந்துவரும், சி.டி.மணி, தக்ஷிணா மூர்த்தி, ஆடு சரவணன், அகரம் கதிர், பாம் சரவணன், காவாங்கரை விஜி. வீரராகவன், ரூபன், ராம்கி, வெள்ளை சஞ்சய், சூழ்ச்சி சுரேஷ், தொப்பை கணேஷ், அறிவழகன், தில்குமார் மதன், மோகன், ஜான்சன், வெள்ளை சுதா, கார்டன் சரத் மற்றும் மோசஸ் போன்ற 19 போக்கிரிகளும் அடங்குவர்.
மேலும், நீதிமன்றப் பிடியாணை பிறக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் அவர் தம் உறவினர், நண்பர்கள் தொடர்புடைய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு, கொடுங்குற்றச் செயல்களில் தொடர்பு ஏற்படாதவண்ணம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொடுங்குற்ற நிகழ்வுகள் மேற்படி ஒருங்கிணைந்த குற்றப் பிரிவின் நடவடிக்கைகளால் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
The post ஒருங்கிணைந்த குற்றப் பிரிவினரின் சட்ட விரோத நடவடிக்கைகளை பெரிதும் குறைத்துள்ளது: சென்னை பெருநகர காவல் appeared first on Dinakaran.