நீரஜ் சோப்ரா அழைப்பு; பாக். வீரர் நிராகரிப்பு

பெங்களூரு: இந்தியாவின் ஈட்டு எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கல் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளார். இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ‘நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டு எறிதல் போட்டி’ பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டெடியத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலக சாம்பியன், ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த தொடரில் பங்கேற்க 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவின் அழைப்பை அர்ஷத் நதீம் நிராகரித்துள்ளார். ‘வரும் மே 22ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது’ என்று அர்ஷத் நதீம் விளக்கமளித்துள்ளார்.

The post நீரஜ் சோப்ரா அழைப்பு; பாக். வீரர் நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: