சட்டப்பேரவையில் கணக்கு கவிதை சொன்ன அமைச்சர் சிவசங்கர்

சென்னை: போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது: கடந்த வாரத்தில் பல்வேறு அதிமுக தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்தார்கள். நீங்கள் போடுகிற கணக்கெல்லாம் சரியாக இருக்காது என்று அவை முன்னவர் சொன்னார். உடனே, வேலுமணி கூட்டிக் கழித்துப் பாருங்கள் கணக்கு சரியாக வருமென்றார். அவருக்கு ஒரேயொரு பதிலை தெரிவித்துக்கொள்கிறேன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வரும். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் போடுகிற கணக்கை நீங்கள் கொஞ்சம் கவனத்தில்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டு மாணவிகள் போடுகிற கணக்கு புதுமைப் பெண் கணக்கு. பள்ளிக் குழந்தைகள் போடுகிற கணக்கு காலை உணவு கணக்கு. மாணவர்கள் போடுகிற கணக்கு தமிழ்ப் புதல்வன் கணக்கு என நீண்ட கணக்கு கவிதைப்பட்டியலிட்டு , நீங்கள் சேர்ப்பது பாவக் கணக்கு என முடித்தார். இதை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார், அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்த அமைச்சர், முடிக்கிற தறுவாயில் இப்படிச் சொல்வது சரியா, பாவக் கணக்கு, புண்ணியக் கணக்கெல்லாம் அவைக்கு தேவையில்லை என்றார்.

The post சட்டப்பேரவையில் கணக்கு கவிதை சொன்ன அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Related Stories: