சென்னை: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவுடி நாகேந்திரன். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர். இவர், வேலூர் மத்திய சிறையில் கடந்த 3 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், கல்லீரல் பாதிப்புக்காக ரவுடி நாகேந்திரன், கடந்த ஜனவரி மாதம் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் 3 மாதமாக சிகிச்சை பெற்று வந்த ரவுடி நாகேந்திரன், சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் மாலை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி நாகேந்திரன் சிகிச்சை முடிந்து சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.