சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மதுராந்தகம் எம்எல்ஏ கு.மரகதம் குமரவேல் பேசுகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படுமா, என்றார். இதற்கு பதில் அளித்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ‘ஓய்வூதியத்தை பொறுத்தவரையில், தற்போது அரசு ஒரு குழுவை நியமித்திருக்கிறது. கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவிற்கான காலவரையறைகள் தரப்பட்டிருக்கிறது. அந்தக் குழு குறித்தும்கூட பல்வேறு அரசு ஊழியர்கள் சங்கங்கள், ஆசிரியர்கள் அரசுக்கு பல கருத்துகளை தந்திருக்கிறார்கள்.
எனவே, அரசும், முதல்வரும் அனைத்து கோரிக்கைகளையும் மிகுந்த கவனத்தோடு கருத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதுசம்பந்தமாக, நான் முதல்வரோடு பேசி, அவர்கள் கேட்டிருக்கக்கூடிய கோரிக்கைப் பற்றி அந்தக் குழுவிலும் விவாதித்து, அதுகுறித்து உரிய நேரத்தில் சரியான முடிவுகளை அரசு மேற்கொள்ளும்,’ என்றார்.
The post பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் சரியான முடிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.