அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் முதன்முறையாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக சட்டமன்ற குழு தலைவர் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகிய இருவரும் தனியாக சந்தித்து பேசி வருகின்றனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறைக்கு வருகை தந்திருந்த நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் சட்டமன்ற கொறடா எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு ஆகியோரை சந்தித்து பேசினார். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த சந்திப்பின் மூலமாக இன்று பேரவையில் அதிமுக – பாஜக இரு கட்சிகளும் இணைந்து பொது கவன ஈர்ப்புக்கான பிரச்சனை எழுப்புவது தொடர்பாகவும் மேலும் பல்வேறு விஷங்கள் குறித்து பேச இருப்பதாகவும், இது குறித்தான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் பிறகு இரு கட்சிகளும் வெளிநடப்பு செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! appeared first on Dinakaran.