14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் வாலிபர் உட்பட 3 பேர் மீது வழக்கு திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை, ஏப்.22: திருவண்ணாமலையில் 14 வயது சிறுமியை கட்டாயம் திருமணம் செய்த வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு கடந்த 11ம் தேதி கட்டாய திருமணம் நடந்ததாக சைல்ட் ஹெல்ப் லைன் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணுக்கு (1098) தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருவண்ணாமலை ஒன்றிய ஊர்நல அலுவலர் சாந்தி மற்றும் மகளிர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, அவலூர்பேட்டையில் உள்ள முருகர் கோயிலில், சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட சிறுமியை மீட்டு திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக ஊர் நல்ல அலுவலர் சாந்தி திருவண்ணாமலை மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை கிருஷ்ணா நகரை சேர்ந்த ஈஸ்வரன்(24), அவரது தந்தை கோவிந்தன்(49), தாய் அம்பிகா(45) ஆகியோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.

The post 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் வாலிபர் உட்பட 3 பேர் மீது வழக்கு திருவண்ணாமலை அருகே appeared first on Dinakaran.

Related Stories: