வந்தவாசி, ஏப்.25: வந்தவாசி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக பலியானார். வந்தவாசி அடுத்த போஸ்கோபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் பாண்டியன்(35). சென்னையில் பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். நேற்று கல்லாங்குத்து கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினார். வந்தவாசி- மேல்மருவத்தூர் நெடுஞ்சாலை மருதாடு புறவழிச்சாலையில் சென்றபோது லாரி ஒன்று இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் பலியான பாண்டியனுக்கு மனைவியும், 5 வயதில் மகளும், 2 வயதில் மகனும் உள்ளனர்.
The post பைக் மீது லாரி மோதி பெயிண்டர் பலி வந்தவாசி அருகே appeared first on Dinakaran.