உண்டியல் காணிக்கை ₹33.60 லட்சம் 270 கிராம் தங்கம், 380 கிராம் வெள்ளி படவேடு ரேணுகாம்பாள் கோயிலில்

கண்ணமங்கலம், ஏப்.24: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.33.60 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், படவேட்டில் பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடப்பது வழக்கம். அதன்படி நேற்று அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடி ஒளிபரப்பு மற்றும் வீடியோ பதிவுடன் 11 நிரந்தர உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. திருவண்ணாமலை உதவி ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. அறங்காவலர் குழுத்தலைவர் விஜயா சேகர், அறங்காவலர்கள் மோகன்தாஸ், சுதாகர், நீதிமன்னன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சேகர், போளூர் சரக ஆய்வாளர் ராகவேந்தர், கலசப்பாக்கம் சரக ஆய்வாளர் நடராஜன், கண்காணிப்பாளர் ஆறுமுகம், மேலாளர் மகாதேவன், கணக்காளர் சீனுவாசன், எழுத்தர்கள் முனியன், மோகன் மேற்பார்வையில் பக்தர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ₹33,60,412, தங்கம் 270 கிராம், வெள்ளி 380 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

The post உண்டியல் காணிக்கை ₹33.60 லட்சம் 270 கிராம் தங்கம், 380 கிராம் வெள்ளி படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: