மும்பை,: 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி படிப்பது கட்டாயம் அல்ல என்று முதல் அமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார். தேசிய கல்வி கொள்கையை படிப்படியாக அமல் செய்து வரும் மகாராஷ்டிராவில் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. இந்த நிலையில் மாநில மொழி ஆலோசனை குழுவும் இந்தி திணிப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் புனேயில் பேட்டி அளித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ‘மகாராஷ்டிராவில் மராத்தி கட்டாயம், இந்தி கட்டாயம் இல்லை.
தேசிய கல்வி கொள்கையின் படி 3 மொழிகள் போதிக்கப்பட வேண்டும். மாணவர்கள் விரும்பினால் அவர்கள் விரும்பும் மொழியை 3வது மொழியாக கற்றுத்தரலாம். ஆனால் அந்த மொழி கற்கும் 20 மாணவர்களாவது அந்த வகுப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு ஆசிரியரை நியமிக்க முடியும்’ என்றார்.
The post மராத்திதான் கட்டாயம் இந்தி கட்டாய பாடம் இல்லை: மகாராஷ்டிரா முதல்வர் திடீர் பல்டி appeared first on Dinakaran.