பஞ்சாபை பஞ்சராக்கி ஆர்சிபி வெற்றி; ஆட்டநாயகன் விருது படிக்கலுக்குதான் வழங்கப்பட்டிருக்க வேண்டும்: விராட்கோஹ்லி பேட்டி

சண்டிகர்: ஐபிஎல் தொடரில் நேற்று பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோஹ்லி 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதனால் கோஹ்லிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து கோஹ்லி கூறுகையில், “இந்த வெற்றி எங்களுக்கு மிக முக்கியமானது. 2 புள்ளிகள் என்பது பிளே ஆப் தகுதி பெறுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும். அந்நிய மண்ணில் நாங்கள் சிறந்த கிரிக்கெட் ஆடி வருகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் 2 புள்ளிகளை பெறுவது மட்டுமே எங்கள் மனநிலையாக உள்ளது. இந்த போட்டியில் கூடுதலாக அதிரடியாக விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் தேவ்தத் படிக்கலின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. ஆட்டநாயகன் விருது தேவ்தத் படிக்கலுக்கு தான் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். எதற்காக எனக்கு விருது அளிக்கப்பட்டது என்று தெரியவில்லை.

கடைசி வரை களத்தில் இருப்பதும், தேவைக்கேற்ப அட்டாக்கிங் கிரிக்கெட் விளையாடுவதும் திட்டமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கில் ஒரேயொரு பார்ட்னர்ஷிப் மொத்தமாக ஆட்டத்தை மாற்றிவிடும். தற்போதைய சூழலில், நான் ஒரு முனையில் நின்று விக்கெட்டை காப்பது ஆர்சிபி அணிக்கு சரியாக இருக்கிறது. டிம் டேவிட், ஜிதேஷ் சர்மா, பட்டிதார் ஆகியோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இன்று ரொமாரியோ சிறப்பாக பங்களித்தார். எங்கள் வீரர்களால் கவுன்டர்அட்டாக் செய்ய முடிகிறது. அதேபோல் அவர்கள் வெற்றிக்கான பசியுடன் இருக்கிறார்கள்’’ என்றார்.

The post பஞ்சாபை பஞ்சராக்கி ஆர்சிபி வெற்றி; ஆட்டநாயகன் விருது படிக்கலுக்குதான் வழங்கப்பட்டிருக்க வேண்டும்: விராட்கோஹ்லி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: