இந்த புகார் குறித்து மருத்துவர் டேனியல் ராஜா கூறுகையில், நெப்போலியன் மகன் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதாக புகார் தெரிவித்தார். நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா புகார் அளித்தார். வதந்தியால் நெப்போலியனின் குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. தனுஷ் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் தன்னுடைய மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பொய்யான தகவல்களை பரப்புவது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளை அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும் சோர்வை தருகிறது. கருது சுதந்திரம் என்ற பெயரில் இவ்வாறு செயல்படுபவர்களை கைது செய்ய வேண்டும் புகார் தெரிவித்தார்.
The post நடிகர் நெப்போலியனின் மகன், மருமகள் பற்றி அவதூறு: மருத்துவர் போலீசில் புகார் appeared first on Dinakaran.