சென்னை: முதல்வரின் 9 அறிவிப்புகளுக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன. 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சரண்விடுப்பு சலுகை 1.4.2026 முதல் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், அதை 1.10.2025 முதல் பெறலாம் என்று அறிவித்துள்ளதன் மூலம் அனைத்து நிலைகளிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 2% அகவிலைப்படி உயர்வு 1.1.2025 முதல் முன்தேதியிட்டுவழங்கியிருப்பதன் மூலம் பணியில் உள்ளவரும் ஓய்வூதியம் பெறுவோரும் பயன்பெறுவார்கள்.
* பண்டிகைக் கால முன்பணத் தொகை உயர்த்தியிருப்பதும் அனைத்து தரப்பு பணியாளர்களுக்கும் ஓய்வு ஊதியர்களுக்கும் பயன்தரக்கூடிய அறிவிப்பாகும். இதைப்போல அறிவிக்கப்பட்ட அனைத்தும் பயன்தரக்கூடியது. மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 47 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள பதவி உயர்வை வழங்க அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
The post முதல்வரின் 9 அறிவிப்புகளுக்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் நன்றி appeared first on Dinakaran.
