நடப்பு ஐபிஎல் தொடரில் பல வீரர்களை கோடிகளை கொட்டி ஏலம் எடுத்தும், பல அணிகள், போட்டிகளில் பயன்படுத்தாமல் அழகு பார்த்துக் கொண்டுள்ளன. தமிழகத்தை சேர்ந்த ‘யார்க்கர்’ நடராஜனை, டெல்லி கேபிடல்ஸ் அணி, ரூ. 10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், இதுவரை ஒரு போட்டியில் கூட அவரை பந்து வீச அந்த அணி பயன்படுத்தவே இல்லை. அதே போல், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, மயங்க் யாதவை, ரூ. 11 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரும் நடப்பு தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த ஜேகப் பெத்தெல் சிறந்த பேட்ஸ்மேன்.
அவரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 2.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவருக்கு இதுவரை பேட்டிங் செய்யும் வாய்ப்பு தரப்படவே இல்லை. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸீயை, குஜராத் டைடன்ஸ் அணி, ரூ. 2.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதுவரை அவர், பார்வையாளராக மட்டுமே அமர்த்தப்பட்டு வருகிறார். ஆப்கானை சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஸ், துவக்க போட்டியிலேயே சதம் விளாசிய சிறந்த பேட்ஸ்மேன். அவரை, ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஏனோ இதுவரை பயன்படுத்தவே இல்லை.
The post பத்தே முக்கால் கோடி தந்தும் பந்துகளே வீசாத நடராஜன் appeared first on Dinakaran.