தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன், தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம், 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளக் கூடாது. மக்கள் தொகைப்படி தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கும். மோடி முதல்வராக இருந்துள்ளதால் அவருக்கு மாநிலங்கள் முக்கியத்துவம் தெரியும் என்று ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் மு.அக்ஸ்டாலி பேட்டி அளித்துள்ளார்.
The post ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.