சொந்த மண்ணில் 46 தோல்வி: பங்கம் ஆன பெங்களூரு அணி

பஞ்சாப் அணியுடன் நடந்த 34வது லீக் போட்டியில் பெங்களூரு அணி மிக மோசமான தோல்வியை தழுவியது. 9 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 95 ரன் மட்டுமே எடுத்தது. நடப்பு தொடரில் பெங்களூருவில் நடந்த 3 போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோசமான தோல்விகளை தழுவி பரிதாப நிலையில் உள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் முதலில் ஆடிய பெங்களூரு, குஜராத் அணியிடம் 8 விக்கெட், டெல்லியிடம் 6 விக்கெட், பஞ்சாப்பிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது.

அது மட்டுமின்றி, சொந்த மண்ணில் 46 தோல்விகளை தழுவி மோசமான சாதனையையும் அந்த அணி நிகழ்த்தி உள்ளது. இந்த சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லியை (டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியம், 45 தோல்வி) பெங்களூரு பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில், கொல்கத்தா (38 தோல்விகள்), பஞ்சாப் (30 தோல்விகள்) உள்ளன.

The post சொந்த மண்ணில் 46 தோல்வி: பங்கம் ஆன பெங்களூரு அணி appeared first on Dinakaran.

Related Stories: