அதிபர் டிரம்பின் பரஸ்பர வரியை தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே வரும் 23ம் தேதி பேச்சுவார்த்தை: வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை


புதுடெல்லி: அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை தவிர்க்க, இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 23ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த 2ம் தேதி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்தார். இதன்படி இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 26% பரஸ்பர வரி விதிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் 23ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 3 நாட்கள் நடக்கும் இப்பேச்சுவார்த்தைக்காக வர்த்தக துறையின் கூடுதல் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழு அமெரிக்கா செல்ல உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் 19 பிரிவுகளில் குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மூலம் இந்தியா பரஸ்பர வரி விதிப்பை தவிர்க்க முடியும் என்பதால் இந்த பேச்சுவார்த்தை முக்கியத்தும் பெற்றுள்ளது. 2021-22 முதல் 2024-25 வரை, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா இருந்து வருகிறது. கடந்த நிதியாண்டில், அமெரிக்காவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 11.6 சதவீதம் அதிகரித்து ரூ.7.52 லட்சம் கோடியாக இருந்தது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவுடான இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை ரூ.3.91 லட்சம் கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அதிபர் டிரம்பின் பரஸ்பர வரியை தொடர்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே வரும் 23ம் தேதி பேச்சுவார்த்தை: வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: