சட்டீஸ்கரில் 33 நக்சல்கள் சரண்

சுக்மா: சட்டீஸ்கரில் தலைக்கு ரூ.40 லட்சம் அறிவிக்கப்பட்டு இருந்த 12 பேர் உட்பட சுமார் 33 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் தொடர்ந்து நக்சல்கள் சரண் அடைந்து வருகின்றனர். வெற்று மற்றும் மனிதாபிமானமற்ற நக்சல் சித்தாந்தம் மற்றும், உள்ளூர் பழங்குடியினர் மீதான அட்டூழியங்களால் ஏமாற்றம் உள்ளிட்ட காரணங்களை காட்டி 33 நக்சல்கள் நேற்று சுக்மா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகளின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள்.

சரணடைந்த நக்சலைட்டுக்கள் மாட்(சட்டீஸ்கர்) நுவாபாடா(ஒடிசா) ஆகிய மாவோயிஸ்ட் பிரிவுகளில் தீவிரமாக செயல்பட்டவர்கள். இதில் துணை கமாண்டர் மற்றும் அவனது மனைவியின் தலைக்கு போலீசார் தலா ரூ.8லட்சம் சன்மானமாக அறிவித்து இருந்தனர். இரண்டு பேரின் தலைக்கு தலா ரூ.5 லட்சமும், 7 பேருக்கு தலா ரூ.2 லட்சமும் சன்மானமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மற்றொரு நக்சல் தலைக்கு போலீசார் ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சரண் அடைந்தவர்களில் மொத்தம் 17 பேர் தலைக்கு ரூ.49 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

The post சட்டீஸ்கரில் 33 நக்சல்கள் சரண் appeared first on Dinakaran.

Related Stories: