இந்த நிலையில் தற்போது மீண்டும் இன்று காலையும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து குறுஞ்செய்தி வந்துள்ளது. காவல்துறையினர் முன்னெச்சரிக்கை காரணமாக நான்சி என்ற மோப்ப நாய்களுடன் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சென்னை ரயில் நிலையத்திலும் ,விமான நிலையங்களிலும், குறிப்பாக சில பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் இமெயில் மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் வருவதால் காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டது.
இந்த விசாரணையில் மூலம் மோப்ப நாய்கள் மூலமாக சோதனை செய்ததில் அவை பெரும்பாலும் புரளி என கண்டறியப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக சில தினங்களுக்கு முன்பாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் 100 எனும் காவல்துறை கட்டுப்பாட்டை அறைக்கு அழைப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை செய்ததில் மன நல சீர் வேண்டும் சிறுவன் தனது தந்தையின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியது கண்டறியப்பட்டது. இதன் பின்னர் போலீசார் எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை appeared first on Dinakaran.