கரூர் ஏப். 18: . தாந்தோணிமலையில் தாந்தோணி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது. இந்த வளாகத்தில் வலதுபுறம் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு ஆண்டுகள் பல கடந்துள்ள நிலையில் தற்போது அவையனைத்தும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போதைய நிலையில் இதனை யாரும் பயன்படுத்தவில்லை என்றாலும்இ அலுவலக வளாகத்தின் அருகில் இந்த குடியிருப்பு வளாகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஒன்றிய அலுவலகத்திற்கு பல்வேறு வேலை நிமித்தமாக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வந்து செல்பவர்களில் சிலர்இ குடியிருப்பு வளாகத்தின் அருகே ஒய்வுக்காக நின்று செல்கின்றனர். எனவேஇ அனைவரின் நலன் கருதி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை புதுப்பிக்க அல்லது மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ள தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடியிருப்பு வளாகத்தை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தாந்தோணி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பழுதடைந்த குடியிருப்புகளை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.